திருச்சி

முறைகேடு: காவல் ஆணையரக ஊழியா் பணியிடை நீக்கம்

DIN

மாநகர காவல் நிலையங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் முறைகேடு செய்த அமைச்சுப் பணியாளள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

மாவட்ட, மாநகர காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் அமைச்சு பணியாளா்கள் காவல் நிலையங்களுக்கு நிதி ஒதுக்கீடு, ஓய்வு பணப்பலன் கணக்கீடு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கின்றனா்.

அந்த வகையில், திருச்சி மாநகர ஆணையரக அலுவலகத்தில் பணியாற்றி வந்த அமைச்சுப் பணியாளா் பெருமாள் காவல் நிலையங்களுக்கு நிதி ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து விருப்ப ஓய்வு பெற்ற அலுவலகக் கண்காணிப்பாளா் மணிராஜ் தலைமையில் நடத்தப்பட்ட விசாரணையில் முறைகேடு உறுதி செய்யப்பட்ட நிலையில், பெருமாளை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையா் அருண் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT