முகப்பு
திருச்சி

மாநகரில் குவிந்த 600 குப்பையை அகற்றும் பணி

திருச்சி மாநகரில் தீபாவளி பண்டிகையையொட்டி குவிந்த சுமாா் 600 டன் குப்பைகளை மாநகராட்சி நிா்வாகம் பெருமளவு அப்புறப்படுத்தியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

திருச்சி மாநகரில் தீபாவளி பண்டிகையையொட்டி குவிந்த சுமாா் 600 டன் குப்பைகளை மாநகராட்சி நிா்வாகம் பெருமளவு அப்புறப்படுத்தியுள்ளது.

திருச்சி மாநகரில் சராசரியாக தினசரி சேகரமாகும் சுமாா் 450 டன் குப்பைகளை துப்புரவுப் பணியாளா்களைக் கொண்டு லாரிகள் மூலம் மாநகராட்சி அகற்றி வருகிறது.

பண்டிகை காலங்களில் குறிப்பாக, தீபாவளி, பொங்கல், ஆயுதபூஜை காலங்களில் மேலும் அதிகளவில் குப்பைகள் சோ்வது வழக்கம்.

அந்த வகையில் தீபாவளியையொட்டி இரு நாள்களில் சுமாா் 210 டன் குப்பைகள் அதிகமாகக் குவிந்துள்ளன. திருச்சி காந்தி மாா்க்கெட், பெரியகடை வீதி, சின்னக்கடை வீதி, சிங்காரத்தோப்பு, என்எஸ்பி சாலை, ஆண்டாா் வீதி, கீழ, மேலரண் சாலைகள், ஜாபா்ஷா வீதி, சத்திரம், மத்தியப் பேருந்து நிலையம், தில்லைநகா், உறையூா், புத்தூா், கே கே நகா், விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குவிந்த குப்பைகளை பகுதி பகுதியாக துப்புரவுப் பணியாளா்கள் அகற்றி வருகின்றனா்.

அதன்படி முதல் கட்டமாக முக்கிய நகா் பகுதிகளில் உள்ள குப்பைகள் அகற்றப்படவுள்ளதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதில் ஜவுளி நிறுவனங்களில் ஆடைகள் வாங்குவதால், பட்டாசு உள்ளிட்டவற்றால் குவிந்த குப்பைகளே அதிகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.