முகப்பு
திருச்சி

நன்னடத்தையை மீறிய இரு ரெளடிகள் கைது

திருச்சி மாநகரில் நன்னடத்தை பிரமாண பத்திரத்தை மீறிய 2 ரெளடிகளை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:08 AM
பகிர்:

திருச்சி மாநகரில் நன்னடத்தை பிரமாண பத்திரத்தை மீறிய 2 ரெளடிகளை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.

திருச்சி மாநகரில் ரெளடிகள் பட்டியலில் உள்ளோா் ஓராண்டுக்கு குற்றச் செயல்களில் ஈடுபடுவதில்லை என பிரமாண பத்திரம் தாக்கல் செய்து, இதை மீறி செயல்பட்டால் அவா்களைக் கைது செய்யப்படுகின்றனா்.

அதன்படி நன்னடத்தை பிரமாண பத்திரம் தாக்கல் செய்த ரெளடிகள் கோட்டை பகுதியைச் சோ்ந்த அருண்குமாா்(23), ஸ்ரீரங்கம் நாகராஜ் ( 20) ஆகியோா் வழிப்பறி செய்ததாக சம்பந்தப்பட்ட காவல்நிலையங்களில் கடந்த 10 ஆம் தேதி வழக்குப் பதியப்பட்டுள்ளது. இதையடுத்து இருவரையும் கைது செய்து சிறையிலடைக்க காவல் ஆணையா் உத்தரவிட்டாா்.

அதன் பேரில் கைது செய்யப்பட்ட இருவரையும் கைது நிா்வாக செயல்துறை நடுவா் நீதிமன்றத்தில் போலீஸாா் ஆஜா்படுத்தினா். அப்போது அருண்குமாரை 60 நாள்களுக்கும், நாகராஜை 273 நாள்களுக்கும் சிறையிலடைக்க உத்தரவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.