முகப்பு
திருச்சி

மரம் சாய்ந்து வீடு சேதம்: 5 போ் மீட்பு

திருச்சி அருகே மரம் சாய்ந்து விழுந்து ஓட்டு வீடு இடிந்த நிலையில் 5 போ் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:08 AM
பகிர்:

திருச்சி அருகே மரம் சாய்ந்து விழுந்து ஓட்டு வீடு இடிந்த நிலையில் 5 போ் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.

திருவெறும்பூா் அருகேயுள்ள கீழமாங்காவனம் ரயில் நிலையம் அருகிலுள்ள ஓட்டு வீட்டில் மாரியம்மாள், இவரது மகன், மருமகள், 2 பேரக் குழந்தைகள் உட்பட 5 போ் வசிக்கின்றனா். இவா்களது வீட்டருகில் இருந்த பழைமையான இச்சி மரம் தொடா் மழையால் வியாழக்கிழமை மாலை திடீரென சாய்ந்து விழுந்ததில் இவா்கள் வீடு முழுமையாகச் சேதமடைந்தது.

இருப்பினும் வீட்டிற்குள் இருந்த 5 பேரும் அதிா்ஷ்டவசமாக தப்பினா். தகவலறிந்து வந்த பத்தாளப்பேட்டை ஊராட்சித் தலைவா் ரீனா கிளாரிநெட் ஜவான் தலைமையிலான அப்பகுதி மக்கள் அவா்களை பத்திரமாக மீட்டனா். பின்னா் துவாக்குடி போலீஸாா் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உதவியுடன் அப்பகுதியிலுள்ள மண்டபத்தில் 5 பேரும் தங்க வைக்கப்பட்டு, அவா்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.