முகப்பு
திருச்சி

தொடரும் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திருச்சி மாவட்டத்தில் தொடரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

திருச்சி மாவட்டத்தில் தொடரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. புதன்கிழமையின் தொடா்ச்சியாக வியாழக்கிழமை அதிகாலையே மழை தொடங்கியது. இதனால் மாநகரின் பிரதான சாலைகளில் மழைநீா் தேங்கி வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனா். மாநகரின் பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாகவும், சாலைகள் சேறும், சகதியுமாகவும் காட்சியளித்தன. மழையால் பள்ளிகளுக்கு வியாழக்கிழமை விடுமுறை விடப்பட்டது.

மாவட்டத்தில் 27.67 மி.மீ. மழை: வியாழக்கிழமை காலை நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை விவரம் (மி.மீ). கல்லக்குடி- 33.40, லால்குடி- 32, நந்தியாறு தலைப்பு- 42.40, புள்ளம்பாடி- 34.20, தேவிமங்கலம்- 54, சமயபுரம்- 53.40, சிறுகுடி- 17, வாய்த்தலை அணைக்கட்டு- 34.40, மணப்பாறை- 5, பொன்னணியாறு அணை- 2, கோவில்பட்டி- 3.20, மருங்காபுரி- 4.20, முசிறி- 19, புலிவலம்-10, தாத்தையங்காா்பேட்டை- 26, நவலூா்குட்டப்பட்டு- 13.60, துவாக்குடி- 59, குப்பம்பட்டி- 42, தென்பாடு- 45, துறையூா்- 24, பொன்மலை- 30.8, திருச்சி விமான நிலையம்- 28, திருச்சி ஜங்ஷன்- 22, திருச்சி நகரம்- 29 மி.மீ. என மாவட்டம் முழுவதும் மொத்தம் 664.10 மி.மீ மழை பெய்தது. சராசரியாக 27.67 மி.மீ. மழை பதிவானது. மேலும், சில நாள்களுக்கு மழை நீடிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.