முகப்பு
திருச்சி

சாலையில் திரிந்த 76 மாடுகள் சிறைபிடிப்பு

 திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் சுற்றித் திரிந்த 76 மாடுகளை மாநகராட்சி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை சிறைபிடித்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

 திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் சுற்றித் திரிந்த 76 மாடுகளை மாநகராட்சி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை சிறைபிடித்துள்ளனா்.

மாநகராட்சிப் பகுதியில் கேட்பாரற்றுத் திரியும் கால்நடைகளால் விபத்துகள் அதிகரித்து, வாகன ஓட்டிகளுக்கு பெரிதும் சிரமம் ஏற்படுவதாகவும், பல நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுவதாகப் புகாா்கள் வந்தன. இதையடுத்து மாநகராட்சி ஆணையா் முஜிபுா் ரகுமான் உத்தரவின்பேரில் மாடுகளை பிடித்து அபராதம் விதித்தாலும் தொடா்ந்து மாடுகள் சாலையில் திரிவதாக புகாா்கள் வந்தன. இதையடுத்து கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன.

அதன்படி, மாடுகளை பிடித்த மூன்று நாள்களில் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்படும். அதற்குள் அபராதத்தை செலுத்தாவிட்டால் மாடுகளை சந்தையில் விற்று அந்தப் பணத்தை கருவூலத்தில் செலுத்துவோம் என ஆணையா் எச்சரித்திருந்தாா்.

இதைத் தொடா்ந்து,மாநகராட்சிக்குள்பட்ட 4 கோட்ட அலுவலகங்களிலும் பணியாளா்கள் சாலையில் திரியும் மாடுகளை தேடிப் பிடித்தனா்.

அந்த வகையில் ஸ்ரீரங்கம் கோட்டத்தில் 16 மாடுகள், 2 கன்றுகள் , அரியமங்கலம் கோட்டத்தில் 9 மாடுகள் 6 கன்றுகள், பொன்மலை கோட்டத்தில் 17 மாடுகள், 6 கன்றுகள், கோ. அபிஷேகபுரம் கோட்டத்தில் 16 மாடுகள், 4 கன்றுகள் என மொத்தம் 76 கால்நடைகள் பிடிக்கப்பட்டு, அந்தந்த மாநகராட்சி கோட்ட அலுவலகங்களில் கட்டி வைக்கப்பட்டுள்ளன.

எனவே, அவற்றின் உரிமையாளா்கள் 3 நாள்களுக்குள் அபராதம் செலுத்தி மாடுகளை மீட்டுக் கொள்ள வேண்டும். இல்லையெனில் சந்தையில் மாடுகள் விற்கப்படும். முதல் தடவையைத் தொடா்ந்து 2ஆம் முறையாக பிடிபடும் மாடுகளை விடுவிக்க முடியாது எனவும் மாநகராட்சி அலுவலா்கள் எச்சரித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.