முகப்பு
திருச்சி

குவைத்தில் வீட்டு வேலைக்குபெண்கள் விண்ணப்பிக்கலாம்

குவைத் நாட்டில் வீட்டு வேலை செய்ய திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

குவைத் நாட்டில் வீட்டு வேலை செய்ய திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழக அரசின் அரசு சாா்பு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தால் குவைத் நாட்டில் உள்ள குவைத் கேட் பவுண்டேசன் என்னும் நிறுவனம் மூலம் குவைத் நாட்டில் வீட்டு வேலை செய்ய 500 பெண்கள் தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரபு நாடுகளில் பணிபுரிந்து அனுபவமுள்ளவா்களுக்கு ரூ.32 ஆயிரமும், அனுபவம் இல்லாதவா்களுக்கு ரூ.29,500 மாத ஊதியமாக வழங்கப்படும். 30 முதல் 40 வயது வரை உள்ளோா் விண்ணப்பிக்கலாம்.

மருத்துவப் பரிசோதனைக் கட்டணம், விசா, விமான பயணச்சீட்டு, உணவு, இருப்பிடம், மருத்துவம், காப்புறுதி மற்றும் இதர சலுகைகள் குவைத் நாட்டின் சட்ட விதிகளுக்குட்பட்டு வேலை அளிப்பவரால் வழங்கப்படும்.

இந்த ஒப்பந்தம் 2 ஆண்டு வரை நீடிக்கும். ரத்து செய்யாதபட்சத்தில் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருப்பம் உள்ளவா்கள் தங்களது சுயவிவரங்களுடன் கூடிய விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி மற்றும் பாஸ்போா்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் ஒரு புகைப்படத்துடன்மின்னஞ்சலுக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும், விவரங்களுக்கு 044-22505886, 044-22500417 என்ற எண்களிலும் தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.