முகப்பு
திருச்சி

திருச்சி விமான நிலையத்தில் ரூ.59 லட்சம் மதிப்பு தங்கம் பறிமுதல் : இருவர் கைது

துபையில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:18 AM
கோப்புப் படம்
பகிர்:

துபையில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது.

இதனையடுத்து பயணிகளையும் பயணிகளின் உடமைகளையும் சுங்கத்துறை,வான் நுண்ணறிவு பிரிவு அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.

இதில், தஞ்சாவூரைச் சேர்ந்த பிரகாஷ், ராமநாதபுரத்தை   சேர்ந்த கர்ணன் பால்பாண்டி ஆகிய  பயணிகளில் இருவரின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டது. இதனை அடுத்து அவர்களிடம் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
சோதனையில் இருவரும்,  தங்கத்தை பசை வடிவில் மாற்றி உடலுக்குள் மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. அதனையடுத்து  இருவரையும் கைது செய்து, தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

கடத்தி வரப்பட்ட தங்கம், 1252 கிராம் எடையில் இருந்தது. அதன் மதிப்பு ரூ.59 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →