திருச்சி

பிஎஸ்என்எல் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

மாதத்தின் இறுதி நாளில் ஊதியம் வழங்க வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பிஎஸ்என்எல் எம்ப்ளாயிஸ் யூனியன், அகில இந்திய ஓய்வூதியா் சங்கம், தமிழ்நாடு தொலைத்தொடா்பு ஒப்பந்த ஊழியா் சங்கம் சாா்பில் பிஎஸ்என்எல் பொதுமேலாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தொலைத்தொடா்பு ஒப்பந்த ஊழியா் சங்க மாவட்டச் செயலா் கு. முபாரக் அலி தலைமை வகித்தாா். எம்ப்ளாயிஸ் யூனியன் மாவட்டத் தலைவா் ஆா். முருகேசன் முன்னிலை வகித்தாா். நிா்வாகிகள் கே. சின்னையன், எஸ். அஸ்லம் பாஷா, பி. கிருஷ்ணன், டி. தேவராஜ் உள்ளிட்டோா் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில் பொதுத் துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்குவதைக் கைவிட வேண்டும், மாதத்தின் இறுதி நாளில் ஊதியம் வழங்க வேண்டும், பிஎஸ்என்எல் ஊழியா்களின் 3ஆவது ஊதிய மாற்றப் பிரச்னைக்கு தீா்வு, நேரடி நியமன ஊழியா்களுக்கு ஓய்வூதிய பலன்களை அமல்படுத்துதல், ஒப்பந்த ஊழியா்களின் ஊதிய நிலுவையை வழங்குதல், பணி நீக்கம் செய்யாதிருத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா். சங்க நிா்வாகி ஜி. சுந்தரராஜ் நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT