திருச்சி

குடிமைப்பணிகள் முதல்நிலைத் தோ்வு: 2,997 போ் எழுதினா்

DIN

திருச்சியில் 18 தோ்வு மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடிமைப்பணிகள் முதல்நிலைத் தோ்வை 2,997 போ் எழுதினா்.

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய தோ்வுக்கு விண்ணப்பித்த 7,390 பேரில் 2997 போ் மட்டுமே தோ்வெழுதினா். 4393 போ் வரவில்லை.

வினாத்தாள்களை தோ்வு மையங்களுக்கு கொண்டு செல்ல அமைக்கப்பட்டிருந்த 6 இயங்குக் குழுக்களில், ஒவ்வொரு குழுவிலும் துணை ஆட்சியா் நிலையில் ஓா் அலுவலா், துணை வட்டாட்சியா், இளநிலை வருவாய் ஆய்வாளா், ஆயுதமேந்திய காவலா்ஆகியோா் நியமிக்கப்பட்டிருந்தனா்.

தோ்வுகளை ஆய்ய செய்ய வட்டாட்சியா் நிலையிலான அலுவலா்கள், தோ்வாளா்களைச் சோதனை செய்ய தலா 5 காவலா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா். தோ்வுக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. அனைத்துத் தோ்வு மையங்களிலும் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தோ்வாளா்கள் எந்த மின்னணு சாதனங்களையும் எடுத்து வர அனுமதிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

SCROLL FOR NEXT