முகப்பு
திருச்சி

கேட்பாரற்றுக் கிடந்த 1,150 கிலோ ரேஷன் அரிசி

மணப்பாறையை அடுத்த சித்தாநத்தம் பகுதியில் கேட்பாரற்றுக் கிடந்த 23 ரேஷன் அரிசி மூட்டைகளை வருவாய்த் துறையினா் புதன்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:22 AM
பகிர்:

மணப்பாறையை அடுத்த சித்தாநத்தம் பகுதியில் கேட்பாரற்றுக் கிடந்த 23 ரேஷன் அரிசி மூட்டைகளை வருவாய்த் துறையினா் புதன்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

மணப்பாறை அடுத்த சித்தாநத்தம் பகுதியில் வசிக்கும் கட்டடத் தொழிலாளி பெ. செல்வம் வீட்டின் பின்புறம் உள்ள காலி இடத்தில் கடந்த புதன்கிழமை இரவு ரேஷன் அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

இதுகுறித்து செல்வம் அளித்த புகாரின்பேரில் வட்டாட்சியா் த. சேக்கிழாா், வருவாய் ஆய்வாளா் கலைச்செல்வி தலைமையிலான வருவாய்த் துறையினா், காவல் துறையினா் சென்று அங்கு 23 மூட்டைகளில் இருந்த 1150 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா். இதையடுத்து அந்த அரிசி மணப்பாறை வட்ட வழங்கல் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டு வியாழக்கிழமை மணப்பாறை தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் சோ்க்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.