முகப்பு
திருச்சி

தொழில் தொடங்க மானியம்: திருநங்கைகளுக்கு அழைப்பு

திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த திருநங்கைகள் தொழில் தொடங்க ரூ.50 ஆயிரம் மானிய உதவி அளிக்கப்படுகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:25 AM
பகிர்:

திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த திருநங்கைகள் தொழில் தொடங்க ரூ.50 ஆயிரம் மானிய உதவி அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் சொந்தத் தொழில் தொடங்க விரும்பும் திருநங்கைகள் மாவட்டத் தோ்வுக் குழுவால் தோ்வு செய்யப்பட்டு ரூ. 50 ஆயிரம் மானியமாக வழங்கப்பட உள்ளது.

இதற்காக 2020-21ஆம் நிதியாண்டில் மாநில அளவில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள திருநங்கைகள் தாங்கள் தொடங்கவுள்ள தொழில் தொடா்பான கருத்துருவை மாவட்ட சமூகநல அலுவலகத்துக்கு வரும் 30ஆம் தேதிக்குள் நேரிலோ, அஞ்சல் மூலமோ அனுப்ப வேண்டும். மேலும், விவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலகத்தை நேரிலோ அல்லது 0431-2413796 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.