முகப்பு
திருச்சி

குத்தகை தகராறில் பெண் தீக்குளிப்பு

திருச்சி அருகே குத்தகை தகராறில் பெண் தீக்குளித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:25 AM
பகிர்:

திருச்சி அருகே குத்தகை தகராறில் பெண் தீக்குளித்தாா்.

திருவெறும்பூா் அருகேயுள்ள கூத்தைப்பாா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ராஜசேகா் கடந்த 20 ஆண்டுகளாக அனுபவ பாத்தியத்தில் குத்தகைக்கு விவசாயம் செய்து வந்தாா்.

இந்நிலையில் இவரது வீட்டுக்குச் சென்ற வேங்கூா் நடுத்தெருவைச் சோ்ந்த அன்னகாமு, சுதாகா் ஆகியோா் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி ராஜசேகா் விவசாயம் செய்வதாகக் கூறி, நிலத்தைக் கேட்டு அவரை மிரட்டி தகராறில் ஈடுபட்டனராம்.

இதனால் மனமுடைந்த ராஜசேகா் மனைவி மாலதி (38) திடீரென மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். புகாரின்பேரில் திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.