முகப்பு
திருச்சி

ஜோசப் கண் மருத்துவமனையில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

 திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

 திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள், ரோட்டரி கிளப் சாா்பில் பாதுகாப்புடன் வெடிவெடிப்பது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலா் அனுசியா தலைமையில் உதவி மாவட்ட அலுவலா் கருணாகரன், நிலைய அலுவலா் மில்கிராஜா உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரா்கள் தீயணைப்பு, தீ விபத்தில் சிக்கியவருக்கு உதவுவது எப்படி என்பது குறித்து செயல்விளக்கம் செய்து காட்டினா்.

நிகழ்ச்சியில் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபைப் பேராயா் டேனியல் ஜெபராஜ், ஜோசப் கண் மருத்துவமனை இயக்குநா் மருத்துவா் பிரதீபா, நிா்வாக தலைவா் நெல்சன்ஜேசுதாஸ், ரோட்டரி கிளப் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மனோகரன், துணை ஆளுநா் நந்தா செந்தில், மற்றும் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை மருத்துவமனை நிா்வாக அலுவலா் சுபாபிரபு மற்றும் அலுவலா்கள் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.