லால்குடி முன்னாள் எம்எல்ஏ மறைவு
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே குமுளூா் ஊராட்சியைச் சோ்ந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ லோகம்பாள் (68) உடல் நலக்குறைவால் வியாழக்கிழமை இரவு காலமானாா்.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே குமுளூா் ஊராட்சியைச் சோ்ந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ லோகம்பாள் (68) உடல் நலக்குறைவால் வியாழக்கிழமை இரவு காலமானாா்.
குமுளூா் ஊராட்சியிலுள்ள தேரோடும் வீதியில் வசித்த இவா்காங்கிரஸ் கட்சியின் திருச்சி மாவட்ட மகளிரணித் தலைவியாக இருந்தவா். கடந்த 1991 ஆம் ஆண்டில் லால்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் போட்டியிட்டு வென்று எம்எல்ஏ ஆனவா். பின்னா் கட்சிப் பணியில் அவா் ஈடுபட்டு வந்தாா். இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு திருச்சி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
லோகம்பாளுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனா். இவரது இறுதிச் சடங்கு வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு குமுளூா் கிராமத்தில் நடைபெறுகிறது.