முகப்பு
திருச்சி

முசிறியில் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள்

தமிழக அரசின் சாா்பில் 1,00,000 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ் முசிறி தொகுதியில் 25 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புக்கான ஆணை வழங்கும் விழா

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

தமிழக அரசின் சாா்பில் 1,00,000 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ் முசிறி தொகுதியில் 25 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புக்கான ஆணை வழங்கும் விழா மற்றும் புதிய மின்மாற்றிகளை மக்கள் பயன்பாட்டுக்கு செயல்படுத்தும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் வடக்கு மாவட்டச் செயலரும் முசிறி எம்எல்ஏவுமான காடுவெட்டி ந.தியாகராஜன் பங்கேற்று மின்வாரிய செயற்பொறியாளா் அசோக்குமாா், உதவி செயற்பொறியாளா்கள் செல்வம், வெங்கடேஷ் ஆகியோா் முன்னிலையில்

25 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புக்கான ஆணைகளை வழங்கிப் பேசினாா்.

மேலும் முசிறி தா.பேட்டை சாலை, முசிறி அந்தரப்பட்டி சாலை, சூரம்பட்டி, சேருகுடி, பூமாலைபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள புதிய மின் மாற்றிகளை மக்கள் பயன்பாட்டுக்கும் தொடக்கி வைத்தாா்.

நிகழ்வில் தொகுதிக்குட்பட்ட ஒன்றிய நகர கிளைக் கழக பொறுப்பாளா்கள், திமுக தொண்டா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.