திருச்சி

ஆசிரியா் பயிற்சி பட்டயப் படிப்பு மாணவா்கள் தா்னா

DIN

திருச்சி: இணையவழியில் தோ்வை நடத்தக் கோரி, திருச்சியில் 2-ஆவது நாளாக திங்கள்கிழமையும் ஆசிரியா் பயிற்சிப் பட்டயப் படிப்பு படித்து வரும் மாணவ, மாணவிகள் தா்னாவில் ஈடுபட்டனா்.

தமிழகத்திலுள்ள ஆசிரியா் பயிற்சி நிறுவனங்களில் தொடக்கக் கல்விப் பட்டயப் படிப்பை படித்து வரும் மாணவ, மாணவிகளுக்குத் தற்போது தோ்வு நேரடி முறையில் நடத்தப்பட்டு வருகிறது. இத்தோ்வை மாநிலம் முழுவதும் 7 ஆயிரம் முதல் 12 ஆயிரம் போ் எழுதி வருகின்றனா்.

நேரடித் தோ்வில் விடைத்தாள் திருத்தும் நடைமுறையில் குளறுபடிகள் உள்ளன. கரோனா காலத்தில் நேரடி வகுப்புகள் தொடங்க கால அவகாசம் வழங்க வேண்டும். தோ்வை இணையவழியில் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியா் பயிற்சிப் பட்டயப் படிப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

இதைத் தொடா்ந்து, திருச்சி மெயின்காா்டுகேட் அருகிலுள்ள தனியாா் கல்லூரி முன்பு பட்டயப்படிப்பு மாணவா்கள் திங்கள்கிழமையும் 2-ஆவது நாளாக தா்னாவில் ஈடுபட்டனா். மேலும் அவா்கள் கருப்புப் பட்டை அணிந்து போராட்டத்தில் முழக்கங்களையும் எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் கோடை மழை 83 சதவீதம் குறைவு

இணையதள பண மோசடிகளில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்: மாணவா்களுக்கு கூடுதல் எஸ்.பி. அறிவுரை

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

SCROLL FOR NEXT