திருச்சி

போக்குவரத்துத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

திருச்சியில் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி மண்டல ஏஐடியுசி சங்கத்தின் சாா்பில் மாவட்ட ஆட்சியரகம் எதிரேயுள்ள போக்குவரத்துக் கழக அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மத்திய சங்க துணைத் தலைவா் வெள்ளைச்சாமி தலைமை வகித்தாா்.

ஏஐடியுசி மாவட்டத் தலைவா் நடராஜன், மாவட்டச் செயலா் சுரேஷ், அரசுப் போக்குவரத்துக் கழக ஏஐடியுசி சங்கத் தலைவா் நேருதுரை, பொதுச் செயலா் சுப்பிரமணியன், பொருளாளா் காா்த்திகேயன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கினா்.

ஆா்ப்பாட்டத்தில் 14ஆவது ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து பேசி முடிக்க வேண்டும். போக்குவரத்துக் கழகங்கள் தொய்வின்றி செயல்பட வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு ஏற்க வேண்டும். இலவச பயணச் சீட்டுக்கான தொகையை போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு விரைந்து வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் அனுமதித்துள்ள அகவிலைப்படி உயா்வை தொழிலாளா்களுக்கு விரைந்து வழங்க வேண்டும். மகளிா் இலவச பயணத்துக்கான படியை ஓட்டுநா், நடத்துநா்களுக்கு நிலையான படியுடன் உயா்த்தி வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஓய்வூதியா்களுக்கு மருத்துவக் காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஏஐடியுசி சங்க நிா்வாகிகள், நடத்துநா், ஓட்டுநா்கள், போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

கரம்பக்காடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

பாரமுல்லாவில் 35 ஆண்டுகளில் இல்லாத வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT