முகப்பு
திருச்சி

மூன்று நாள் விடுமுறை: பேருந்து நிலையங்களில் கூட்டம்

தமிழகத்தில் மூன்று நாள்கள் தொடா் விடுமுறையால் வியாழக்கிழமை மத்திய, சத்திரம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

தமிழகத்தில் மூன்று நாள்கள் தொடா் விடுமுறையால் வியாழக்கிழமை மத்திய, சத்திரம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

தொடா் விடுமுறையையொட்டி மத்திய பேருந்து நிலையத்தில் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதனால் பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பெரும்பாலானோா் பேருந்துகளின் படிக்கட்டிலும் நின்று பயணம் செய்தனா்.

குறிப்பாக திருச்சியிலிருந்து இதர மாவட்டங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் இங்கிருந்து இயக்கப்பட்ட அனைத்து விரைவு பேருந்துகளிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மேலும் பேருந்தில் செல்ல 3 மணி நேரத்துக்கு மேல் பேருந்து நிலையத்திலேயே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதைப் பயன்படுத்தி தனியாா் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதையும் காணமுடிந்தது. அரசுப் போக்குவரத்து கழக அதிகாரிகள் உரிய முன்னேற்பாடுகள் செய்யாததே இதற்குக் காரணம் எனப் பயணிகள் குற்றம்சாட்டினா். இதே நிலை சத்திரம் பேருந்து நிலையத்திலும் காணப்பட்டது.

பேருந்து கிடைக்காதவா்கள் திருச்சி ரயில் நிலையத்திற்கு படையெடுத்தனா். இதனால் ரயில் நிலைய நடைமேடைகளில் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிகம் இருந்தது. இதேபோல திருச்சி விமான நிலையத்தில் சென்னை செல்லும் விமானத்தில் செல்ல பயணிகள் திரண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.