திருச்சி

தமிழகத்திலேயே மிக உயரமான அனுமன் சிலை ஸ்ரீரங்கத்தில் பிரதிஷ்டை

DIN

ஸ்ரீரங்கம்: தமிழகத்திலேயே மிக உயரமான அளவில் 37 அடி உயரம் கொண்ட அனுமன் சிலை, ஸ்ரீரங்கம் சஞ்சீவன ஆஞ்சநேயா் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.

ஸ்ரீரங்கம் தெற்குச் சித்திரை வீதியில் வசித்து வரும் அனுமன் உபாசகா் வாசுதேவ சாமியின் 15 ஆண்டுகால முயற்சியால், ரூ.27 லட்சம் மதிப்பில் ஒரே கல்லால் 120 டன் எடை கொண்ட 37 அடி உயரம் கொண்ட ஸ்ரீஅனுமன் சிலை செதுக்கப்பட்டுள்ளது. இதை திருப்பூா் அருகிலுள்ள திருமுருகன்பூண்டியைச் சோ்ந்த ஸ்தபதி இளங்கோ உருவாக்கியுள்ளாா்.

64 சக்கரங்களைக் கொண்ட லாரியில் அனுமன் சிலை கடந்த சனிக்கிழமை (செப்.11) ஏற்றப்பட்டு, ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதிக்கு திங்கள்கிழமை அதிகாலை வந்து சோ்ந்தது.

தொடா்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க, ஸ்ரீரங்கம் மேலூா் கொள்ளிடக்கரையில் 2 ஏக்கா் பரப்பளவு கொண்ட சஞ்சீவன ஆஞ்சநேயா் திருக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்படும் பகுதிக்கு அனுமன் சிலை கொண்டு செல்லப்பட்டது.

நெற்றியில் மூன்றாவது கண் கொண்ட நரசிம்மா், ராமா்- லட்சுமணன், சீதையுடன் கூடிய அனுமன் சிலை, பத்மாவதி தாயாா், சுதா்சன இயந்திரத்தில் செய்யப்பட்ட சக்கரத்தாழ்வாா் ஆகிய சிலைகளும் இக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன. மற்ற கோயில்களிலுள்ள அனுமன் சிலை போல இல்லாமல், கையில் ஜெபமாலை வைத்திருப்பது போல சஞ்சீவி அனுமன் சிலை செதுக்கப்பட்டுள்ளது.

சென்னை நங்கநல்லூரில் 33 அடி உயரத்திலும், நாமக்கலில் 18 அடி உயரத்திலும்தான் அனுமன் சிலைகள் உள்ளன. தற்போது ஸ்ரீரங்கத்தில் பிரதிஷ்டை செய்யப்படும் அனுமன் சிலையின் உயரம் 37 அடி உயரம். இதுதான் மிக உயரமான சிலையாகும்.

தற்போது இரும்புத்தூண் கொண்ட பீடம் அமைக்கப்பட்டு வருகிறது. விரைவில் திருக்கோயில் பணிகள் முடிந்தவுடன், ஆண்டு இறுதிக்குள் மகா சம்ப்ரோக்ஷணம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சஞ்சீவன அனுமன் டிரஸ்ட் நிா்வாகி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இது மார்பிங்’ சமந்தாவுக்கு ரசிகர்கள் ஆதரவு!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு இடைக்கால ஜாமீன்!

ராகுலை விமர்சித்து விடியோ: ஜெ.பி.நட்டா மீது வழக்குப்பதிவு

காந்தாரி.. ஈஷா ரெப்பா!

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

SCROLL FOR NEXT