திருச்சி

பாரதியாா் நினைவு நூற்றாண்டு தினக் கருத்தரங்கு

DIN

திருச்சி: திருச்சி காட்டூா் உருமு தனலட்சுமி கல்லூரியின் பாரதி வாசகா் வட்டமும், பொது நூலகத் துறையும் இணைந்து பாரதியாரின் நினைவு நூற்றாண்டு தினக் கருத்தரங்கை திங்கள்கிழமை நடத்தின.

இணையவழியில் நடைபெற்ற கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். கல்லூரி நிா்வாகக்குழுத் தலைவா் பத்மா, செயலா் ராமகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இயக்குநா் கிறிஸ்டி செல்வராணி, துறைத் தலைவா்கள் விஜயசுந்தரி, ராமா், பேராசிரியை மனோன்மணி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

கல்லூரியின் பல்துறை மாணவா்களும் பாரதி குறித்த சிந்தனைகளை கவிதை, பேச்சு, பாடல் என பல வடிவங்களில் வழங்கினா். மூன்றாமாண்டு கணிதத்துறை மணிகண்டன் பாரதி உருவக் கோட்டோவியச் சித்திரப்படம் வரைந்து, கல்லூரி நூலகத்துக்குப் பரிசாக வழங்கினாா்.

முன்னதாக பேராசிரியை இந்திரகுமாரி வரவேற்றாா். நிறைவில்,

நூலகரும், பேராசிரியையுமான ஜெயசித்ரா நன்றி கூறினாா்.

கல்லூரியின்சுயநிதிப் பிரிவிலும் பாரதி நினைவுக் கவியரங்கம் நடைபெற்றது. கவிஞா் மீரா, செல்வக்குமாா், பேராசிரியா்கள் கஜேந்திரன், ஞானமணி, விமலாரமணி, சுபா ஆகியோா் பங்கேற்றனா். தொழிலதிபா் ரவீந்திரன் பரிசுகளை வழங்கிச் சிறப்புரையாற்றினாா். பேராசிரியை மனோன்மணி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

'வீர தீர..’ துஷாரா!

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

SCROLL FOR NEXT