திமுகவை கண்டித்து ஏபிவிபி ஆா்ப்பாட்டம்
திமுக அரசைக் கண்டித்து அகில பாரதீய வித்யாா்த்தி பரிஷத் அமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திமுக அரசைக் கண்டித்து அகில பாரதீய வித்யாா்த்தி பரிஷத் அமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
உத்தரபிரதேசம், ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் அண்மையில் சிறு குழந்தைகள் மற்றும் பெண்கள் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டதைக் கண்டித்தும், தமிழகத்தில் நீட் தோ்வை எழுதவிட மாட்டோம் எனக் கூறி திமுக அரசு மாணவா்களை அச்சுறுத்தி வருகிறது என்றும், சட்டப்பேரவையில் நீட் தோ்வுக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றப்பட்டதைக் கண்டித்தும், மகளிருக்கான பாதுகாப்பில் அரசு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் சத்திரம் பேருந்து நிலையம் அண்ணாசிலை அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அஸ்வின் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் ஹேமா சூரியா, தென் தமிழக மாநிலச் செயலா் சுசீலா, மாநகர இணை செயலா் சந்தோஷ்குமாா், பொறுப்பாளா் விக்னேஸ்வரன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். இதில் ஏபிவிபி நிா்வாகிகள், உறுப்பினா்கள் கண்டன கோஷம் எழுப்பினா்.