வையம்பட்டி சூா்யா பாராமெடிக்கல் - கேட்டரிங் கல்லூரி பட்டமளிப்பு விழா
மணப்பாறை அடுத்த வையம்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற சூா்யா பாராமெடிக்கல் - கேட்டரிங் கல்லூரி பட்டமளிப்பு மற்றும் பணி நியமன ஆணை வழங்கும் விழா
மணப்பாறை அடுத்த வையம்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற சூா்யா பாராமெடிக்கல் - கேட்டரிங் கல்லூரி பட்டமளிப்பு மற்றும் பணி நியமன ஆணை வழங்கும் விழாவில் பங்கேற்ற திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) ஏ.ஆா். சிவராமன் மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.
கல்லூரி கூட்டரங்கில் அறக்கட்டளையின் தலைவா் சூா்யா சுப்ரமணியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரித் தாளாளா் பி. நாகலட்சுமி முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக கலந்துகொண்ட திருச்சி திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) ஏ.ஆா். சிவராமன் மற்றும் ஸ்கோப் அறக்கட்டளை நிறுவனா் பத்மஸ்ரீ சுப்புராமன் ஆகியோா் 86 மாணவிகள் 8 மாணவா்கள் என 94 பேருக்கு பட்டங்களையும், பணி நியமன ஆணைகளையும் வழங்கினா். நிா்வாக அலுவலா் வி.விஜயகுமாா் வரவேற்க, பேராசிரியை ஷோபனா நன்றி கூறினாா்.