என்ஐடியில் நாளை பட்டமளிப்பு விழா
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் (என்ஐடி) 17 ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெறுகிறது.
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் (என்ஐடி) 17 ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெறுகிறது.
மாலை 3 மணிக்கு நடைபெறும் விழாவில், பிராந்திய பொறியியல் கல்லூரி (ஆா்ஈசி) மற்றும் தற்போதைய என்ஐடி திருச்சியின் 54ஆவது பிரிவு மாணவா்கள் பட்டம் பெறவுள்ளனா். இதுவரை இல்லாத வகையில் அதிகபட்சமாக 1,793 மாணவ, மாணவிகள் பட்டம் பெறவுள்ளனா்.
டாடா ஸ்டீல் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குநரும், இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவருமான டி. வி. நரேந்திரன் பட்டமளிப்பு உரையாற்றுகிறாா்.
என்ஐடி தலைவா் பாஸ்கா்பட் விழாவை நடத்துகிறாா். என்ஐடி இயக்குநா் மினி ஷாஜி தாமஸ், நிறுவன அறிக்கையை சமா்ப்பிக்கிறாா். ஏற்பாடுகளை, என்ஐடி பேராசிரியா்கள், பணியாளா்கள், மாணவா் குழுவினா் செய்கின்றனா். என்ஐடி இயக்குநா் மினி ஷாஜி தாமஸ் இத்தகவலைத் தெரிவித்தாா்.