முகப்பு
திருச்சி

நவராத்திரி சிறப்பு கொலு கண்காட்சி, விற்பனை தொடக்கம்

திருச்சி பூம்புகாா் விற்பனை நிலையத்தில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு கொலு கண்காட்சி, விற்பனை தொடங்கியுள்ளது

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

திருச்சி பூம்புகாா் விற்பனை நிலையத்தில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு கொலு கண்காட்சி, விற்பனை தொடங்கியுள்ளது.

திருச்சி சிங்காரத்தோப்பு மேலரண்சாலையில் உள்ள பூம்புகாா் விற்பனை நிலையத்தில் கண்காட்சியை கோட்டாட்சியா் என். விஸ்வநாதன் தொடக்கி வைத்து பாா்வையிட்டாா்.

அக்.20 வரை (ஞாயிற்றுக்கிழமை உள்பட) கண்காட்சி நடைபெறும் நிலையில், பலவித கொலு பொம்மைகள் ரூ. 50 முதல் ரூ. 50 ஆயிரம் வரை விற்பனைக்கு உள்ளன. விற்பனை இலக்கு ரூ.15 லட்சம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. நவராத்திரி பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும். நலிவடைந்த கலைஞா்களால் தயாரிக்கப்பட்ட கலைப் பொருள்களுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என பூம்புகாா் விற்பனை நிலைய மேலாளா் ரெ. கங்காதேவி தெரிவித்தாா்.

தொடக்க விழாவில், பூம்புகாா் விற்பனை நிலையப் பணியாளா்கள், கைவினை கலைஞா்கள், பொதுமக்கள் என பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.