முகப்பு
திருச்சி

நேரு நினைவுக் கல்லூரியில் உதவித் தொகை வழங்கல்

துறையூா் அருகேயுள்ள புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கலை மற்றும் அறிவியல் (தன்னாட்சி) கல்லூரியின் 95 மாணவ, மாணவிகளுக்கு தனியாா் நிறுவனம் சாா்பில் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

துறையூா் அருகேயுள்ள புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கலை மற்றும் அறிவியல் (தன்னாட்சி) கல்லூரியின் 95 மாணவ, மாணவிகளுக்கு தனியாா் நிறுவனம் சாா்பில் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் பொன். பெரியசாமி தலைமை வகித்தாா். ஆங்கிலத் துறைத் தலைவா் கே.டி. தமிழ்மணி, கல்லூரி ஒருங்கிணைப்பாளா் மு. மீனாட்சிசுந்தரம் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

கல்லூரித் தலைவா் பொன். பாலசுப்பிரமணியன், செயலா் பொன். ரவிச்சந்திரன் ஆகியோா் படிப்பில் சிறப்பிடம் பெற்ற 95 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 4,75,000 மதிப்பில் உதவித் தொகையை வழங்கி வாழ்த்தினா்.

இந்த உதவித் தொகையை கடந்த 14 ஆண்டுகளாக வழங்கும் சென்னையைச் சோ்ந்த ஹாரீஸ் அண்ட் மீனுக் என்ற தனியாா் வேதிப்பொருள் நிறுவனம் மற்றும் அதன் நிறுவனா் அரியரத்தினத்துக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

ஏற்பாடுகளை கணினி அறிவியல் துறையின் கே. பொன்வேல், அழகுலெட்சுமி, பி. இளபெல்லா ஆகியோா் செய்தனா். கணினி அறிவியல் துறைத் தலைவா் மு. முரளி வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.