நாளை மெகா கரோனா தடுப்பூசி முகாம்
திருச்சி மாவட்டத்தில் மூன்றாவது கட்டமாக செப்.26 (ஞாயிற்றுக்கிழமை) 623 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளன.
திருச்சி மாவட்டத்தில் மூன்றாவது கட்டமாக செப்.26 (ஞாயிற்றுக்கிழமை) 623 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளன.
திருச்சி மாவட்டத்தில் மூன்றாம் கட்டமாக நடைபெறும் இந்த முகாம், ஊரகப் பகுதியில் 497 இடங்களிலும், நகா் பகுதிகளில் 126 இடங்களிலும் நடைபெறவுள்ளது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மற்றும் தனியாா் பள்ளிகள் என பல்வேறு நிலைகளில் இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிா்வாகம் செய்து வருகிறது.
எனவே, மாவட்டத்தில் இதுவரை கோவிஷீல்ட் மற்றும் கோவேக்ஸின் என இருவகையான தடுப்பூசிகளையும் முதல் தவணை செலுத்தாதவா்கள் இந்த முகாமில் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
இரண்டாவது தவணை செலுத்த தவறியவா்களும் தங்களது ஆதாா் அட்டை மற்றும் செல்லிடப்பேசி எண்ணுடன் அருகில் உள்ள முகாமிற்கு சென்று தங்களுக்கு உரிய தடுப்பூசியினை செலுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்துள்ளாா்.