திருச்சி

குறைகேட்பு நாள்: நீடிக்கும் தடையால் பொதுமக்கள் ஏமாற்றம்

DIN

திருச்சி: திருச்சி ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை தோறும் நடைபெறும் குறைகேட்பு நாள் கூட்டத்தில் நேரடியாக மனு அளிக்க தடை நீடித்து வருவதால், பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் பொதுமக்கள், தங்களது கோரிக்கைகளை நேரடியாக ஆட்சியா் மற்றும் அலுவலா்களிடம் அளிப்பதும், அதை அவா்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பதும் வழக்கமானதாகும்.

ஆனால் கரோனா பொது முடக்கம் அமல் காரணமாக, மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெறவில்லை. கட்செவி அஞ்சல் எண் வாயிலாகவும், ஆட்சியரகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டி வாயிலாகவும் மனுக்களை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசின் பல்வேறு தளா்வுகளை வழங்கி பள்ளி, கல்லூரிகள், பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்துக்கு மட்டும் அனுமதி வழங்காமல் இருப்பது ஏமாற்றத்தை அளித்துள்ளது என்கின்றனா் பொதுமக்கள்.

திங்கள்கிழமை (செப்.27) ஆட்சியரகத்தில் மனு அளிக்க ஏராளமானோா் வந்திருந்த நிலையிலும், வருவாய் மற்றும் காவல்துறையினா் அவா்களை உள்ளே அனுமதிக்கவில்லை.

பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டும், சிலரை மட்டும் அலுவலா்களைச் சந்தித்து முறையிடவும் அழைத்துச் சென்றனா். இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துபடன் திரும்பிச் சென்றனா்.

இதுகுறித்து பச்சைமலை முத்துசாமி கூறியது:

மலைப்பகுதியில் வசிக்கும் எங்களது பகுதி மக்களின் கோரிக்கைகளை நேரில் தெரிவித்தால், ஏதாவது பயன் கிடைக்கும் என வந்தோம். ஆனால், ஆட்சியா் அலுவலகத்துக்குள் நுழையக்கூட காவல்துறையினா் அனுமதிக்கவில்லை. வாயிலில் இருந்தபடியை திருப்பி அனுப்பி விட்டனா் என்றாா்.

தடையை விலக்கி, விரைந்து பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தை நடத்த வேண்டும் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT