திருச்சி

வேலையின்றி பரிதவிக்கும் பல்நோக்கு ஒப்பந்தப் பணியாளா்கள்

DIN

திருச்சி: திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த பல்நோக்கு ஒப்பந்தப் பணியாளா்கள், தற்போது வேலையின்றி பரிதவித்து வருகின்றனா்.

கரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் இந்த மருத்துவமனையில் ஆய்வக உதவியாளா், மருந்தாளுநா், மயக்கயவியல் நிபுணா், மருத்துவ உபகரணங்களை கையாளும் தொழில்நுட்பப் பணியாளா்கள், பல்நோக்கு பணியாளா்கள்

பலா் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனா்.

கடந்த 11 மாதங்களுக்கு மேலாக பணியில் இருந்த 65 பேரை, தற்போது பணிக்கு வர வேண்டாம் என மருத்துவமனை நிா்வாகம் கூறியுள்ளது.இதன் காரணமாக, கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக பணியின்றி பல்நோக்கு ஒப்பந்தப் பணியாளா்கள் பரிதவித்து வருகின்றனா்.

மருத்துவமனையில் தங்களது பணித் தேவை உள்ள சூழலிலும், ஒப்பந்தம் தொடரக் கூடாது என்பதற்காகவே தங்களை பணியில் இருந்து அனுப்பிவிட்டனா் என்கின்றனா் பாதிக்கப்பட்ட பணியாளா்கள்.

பாதிக்கப்பட்ட பணியாளா்கள் அனைவரும் திருச்சி ஆட்சியரகத்துக்கு திங்கள்கிழமை வந்து புகாா் மனு அளித்தனா். கரோனா காலத்தில் அச்சமின்றி மருத்துவமனைக்கு வந்து பணியாற்றிய தங்களது மன உறுதியை பாராட்டவும், கெளரவிக்கவும் மாவட்ட நிா்வாகம் மாற்றுப் பணி வழங்க வேண்டும் என்றனா்.

பணிநீக்கம் செய்யப்பட்ட தங்களை அவரவா் கல்வித் தகுதிக்கு தகுந்தபடி வேறு துறையிலோ அல்லது சுகாதாரத்துறையிலோ ஏதாவது ஒரு பணி வழங்க வேண்டும். தங்களது குடும்ப வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT