FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

திருச்சி மாரத்தான்: ஆட்சியர், மாணவ, மாணவிகள் பங்கேற்பு

திருச்சியில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

1 பிப்ரவரி 2024, 2:21 pm IST
பகிர்:

திருச்சி: திருச்சியில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

75-வது சுதந்திர தின விழா சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவையொட்டி, திருச்சி திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் உள்ள வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம் நினைவுத் தூண் அருகில் இருந்து விளையாட்டு வீரர்கள், மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பங்கேற்ற மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு இன்று காலை தொடங்கி வைத்து ஓட்டத்தில் பங்கேற்றார்.

 முன்னதாக வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம் நினைவுத்தூணில் உள்ள மகாத்மா காந்தியடிகள், பெருந்தலைவர் காமராஜர், மூதறிஞர் இராஜாஜி ஆகியோரின் திருவுருச்சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் த.பழனிகுமார், வருவாய் கோட்டாட்சியர் கோ.தவச்செல்வம், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆ.ஞானசுகந்தி, வட்டாட்சியர் சேக் முஜிப் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments