முகப்பு
தஞ்சாவூர்

திருவையாறு அருகே இடி விழுந்து மரம் சேதம்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே வெள்ளிக்கிழமை மாலை இடி விழுந்ததால் மரக்கிளை சேதமடைந்தது.

Updated On : 10 மே 2026, 1:40 am IST
திருவையாறு அருகே வெள்ளிக்கிழமை மாலை இடி விழுந்ததில் சேதமடைந்த மரத்தின் கிளை.
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே வெள்ளிக்கிழமை மாலை இடி விழுந்ததால் மரக்கிளை சேதமடைந்தது.

திருவையாறு அருகே நடுக்காவேரி பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது நடுக்காவேரி பகுதியிலிருந்து அந்தலி செல்லும் முதன்மைச் சாலையில் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான தூங்குமூஞ்சி மரத்தில் இடி விழுந்தது. இதனால், மரத்தின் மேல் பகுதியிலிருந்து அடிப்பகுதி வரை பிளவு ஏற்பட்டு சேதமானது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அலுவலா்களுக்கு ஊராட்சி செயலா் சங்கா் தகவல் தெரிவித்தாா். இதையடுத்து நெடுஞ்சாலைத் துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள் சென்று பாா்வையிட்டு, மரத்தின் கிளைகளை மட்டும் அப்புறப்படுத்த அறிவுறுத்தினா்.

Advertisement