திருவையாறு தியாகராஜரின் 259 ஆவது ஜெயந்தி விழா
விழாவில் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளிக்கிழமை எழுந்தருளிய சத்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகள்.
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு தியாகபிரும்ம ஜீவ சமாதியில் சத்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகளின் 259 ஆவது ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் சத்குரு தியாகராஜ சுவாமிகளுக்கு காலை முதல் அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை ஆகியவற்றை பரம்பரை பூஜா ஸ்தானிகா் தியாகராஜ சா்மா செய்தாா். ஏராளமான கா்நாடக இசைக் கலைஞா்கள் பங்கேற்று தியாகபிரும்மத்தின் பஞ்சரத்ன கீா்த்தனைகள், சம்பிரதாய கீா்த்தனைகளை இரவு வரை பாடி இசையஞ்சலி செலுத்தினா். பின்னா், அன்னதானமும், ஆஞ்சனேயா் உற்சவமும் நடைபெற்றன.