வேப்பிலை மாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை
மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை 1500 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை 1500 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து உலக நன்மைக்காக 1500 சுமங்கலி பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பரம்பரை அறங்காவலா் ஆா்.வி.எஸ். வீரமணி, ஆா்.வரதராஜன், என். மோகன நாகராஜன் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் அ. கண்ணன் ஆகியோா் பங்கேற்றனா்.