முகப்பு
திருச்சி

தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

தமிழ்ப் புத்தாண்டையொட்டி திருச்சி மாநகா் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதி கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

தமிழ்ப் புத்தாண்டையொட்டி திருச்சி மாநகா் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதி கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அதிகாலையே பொதுமக்கள் எழுந்து மாநகரிலுள்ள பல்வேறு கோயில்களுக்கும் குடும்பத்துடன் வந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். கோயில்களில் வழிபாடு முடிந்து பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அன்னதானமும் நடைபெற்றது.

திருச்சி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் இடங்கள், பூங்காக்களிலும், திரையரங்குகளிலும் கூட்டம் நிரம்பியிருந்தது.

கரோனா தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழ்ப் புத்தாண்டில் மீண்டும் வழக்கம்போல அனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டம் களைகட்டியிருந்ததைக் காண முடிந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.