FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

முஸ்லிம் சமூகத்திற்கு திரிணமூல் காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை: ஓவைசி

முஸ்லிம் சமூகத்திற்கு திரிணமூல் காங்கிரஸ் உதவவில்லை.. ஓவைசி குற்றச்சாட்டு

Updated On : 25 மார்ச் 2026, 12:52 pm IST
ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி - DPS
பகிர்:

திரிணமூல் காங்கிரஸ் முஸ்லிம் வாக்குகளைப் பெற்றிருந்தாலும், அந்த சமூகத்திற்கு எதுவும் செய்யவில்லை என ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி குற்றம் சாட்டினார்.

கொல்கத்தாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஓவைசி,

திரிணமூல் காங்கிரஸ் கட்சி முஸ்லிம் வாக்குகளைப் பெற்றபோதிலும், அச்சமூகத்திற்கு எதுவும் செய்யவில்லை என குற்றம் சாட்டினார்.

Advertisement

Advertisement

மேற்கு வங்க மக்கள் மூச்சுத் திணறும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் தேடிக்கொண்டிருக்கும் மாற்று வழி வழங்குவதற்காகத் தனது கட்சி ஹுமாயூன் கபீரின் ஏஜேயுபி கட்சியுடன் கைகோர்த்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் நலிந்த பிரிவினர் சுரண்டப்படுவதைத் தடுத்த நிறுத்துவதையும், அவர்களுக்கு அதிகாரமளிப்பதையும் நோக்கமாகக் கொண்ட ஹுமாயூன் கபீருடனான கூட்டணி அமைந்துள்ளது.

எங்கள் கூட்டணி முஸ்லிம்களின் அரசியல் தலைமைத்துவத்தை வலுப்படுத்தவும் முயற்சிக்கும். மாநிலத்தில் சிறுபான்மையினரின் மேம்பாடு என்பது முக்கிய பிரச்னையாக உள்ளது.

மேற்கு வங்கத்தில் தனது கட்சியின் இருப்பு பாஜகவிற்கு உதவுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, ஜனநாயக நாட்டில் மக்கள் தாங்கள் விரும்பும் கட்சிக்கு வாக்களிக்க முழுச் சுதந்திரம் பெற்றவர்கள் என்றும் அவர் பதிலளித்தார்.

முர்ஷிதாபாத் மாவட்டத்தில் பாபரி மசூதி குறித்த சர்ச்சைக்கு மத்தியில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பிறகு, ஆம் ஜனதா உன்னயன் கட்சியைத் தொடங்கிய கபீர், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தக் கூட்டணி 182 தொகுதிகளில் போட்டியிடும் எனத் தெரிவித்தார்.

தேர்தல் முடிவுகள் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத பிளவுபட்ட தீர்ப்பை அளிக்கும் பட்சத்தில், அரசு அமைப்பதில் இந்தக் கூட்டணி ஒரு தீர்க்கமான சக்தியாக உருவெடுக்கக்கூடும் என்று அவர் கூறினார்.

294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்குவங்க சட்டப்பேரவைக்கு வாக்குப்பதிவு ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

summary

Alleging that the TMC bagged Muslim votes but did nothing for the community, AIMIM chief Asaduddin Owaisi on Wednesday claimed that Chief Minister Mamata Banerjee's politics helped the BJP grow in West Bengal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments