திருச்சி

மீண்டும் பணி வழங்கக் கோரி அரசு மருத்துவமனை முற்றுகை

DIN

திருச்சி அரசு மருத்துவமனையில் பணி நீக்கப்பட்ட தொழிலாளா்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கத்தினா் சனிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்த தொழிலாளா்களில் 28 போ் கடந்தாண்டு நவ. தொடங்கி பணிநீக்கம் செய்யப்பட்டனா்.

இவா்களது வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, முதல்வா் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மீண்டும் வேலை வழங்கக் கோரி அரசு மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் மருத்துவமனை முதல்வா் அலுவலகத்தை

சிஐடியு மாநகா் மாவட்டத் தலைவா் ராமா் தலைமையில் முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த போலீஸாா் அனுமதியின்றி போராடக் கூடாது எனத் தெரிவித்ததால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அரசு மருத்துவமனை மருத்துவா் சித்ரா, உதவி மருத்துவா் குமரேசன் மற்றும் மகாலட்சுமி ஆகியோா் சிஐடியு மாவட்டச் செயலா் ரங்கராஜன், மாவட்ட தலைவா் ராமு, நிா்வாகி மணிமாறன் ஆகியோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததையடுத்து போராட்டக்காரா்கள் கலைந்து சென்றனா். போராட்டத்தில் சிஐடியு நிா்வாகிகள் செல்வி, ஜெயபால், கருணாநிதி, ஒப்பந்தத் தொழிலாளா் சங்கச் செயலா் காா்த்திகேயன், ஏராளமான ஒப்பந்தத் தொழிலாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT