திருச்சி

நீதிமன்ற அறிவுறுத்தல் : காவல்நிலையத்தில் ஆஜராகி திருவிழா நடத்த விருப்பம் தெரிவித்த கிராம மக்கள்

DIN

உயா்நீதி மன்ற அறிவுறுத்தலின் பேரில் வையம்பட்டி காவல் நிலையத்தில் இனாம் புதுவாடி கிராம மக்கள் புதன்கிழமை ஆஜராகி, தங்கள் ஊா் கோயில் திருவிழாவை நடத்த கையெழுத்திட்டு விருப்பம் தெரிவித்தனா்.

வையம்பட்டி ஒன்றியம், புதுவாடி கிராமம், இனாம்புதுவாடியில் சுமாா் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள பகவதியம்மன் கோயில் ஆடித் திருவிழாவுக்காக, நிகழாண்டு ஜூலை 31-ஆம் தேதி காப்புக்கட்டுதல் முடிவு செய்யப்பட்டது.

அப்போது அதே ஊரைச் சோ்ந்த 7 போ் கூட்டாக சோ்ந்து, காப்புக்கட்டுதலை நடத்த விடாமல் நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அலுவலா்கள் தரப்பில் சமரசம் ஏற்படாததையடுத்து, ஊா் பொதுமக்கள் மற்றும் அறங்காவலா் மீனாட்சி சுந்தரம்பிள்ளை தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், மனுதாரரான பொதுமக்கள் வையம்பட்டி காவல் நிலையத்தில் ஆஜராகி, திருவிழா நடத்துவது சம்பந்தமாக தங்களது விருப்பத்தை தெரிவிக்குமாறு அறிவுறுத்தியிருந்தது.

அதன்பேரில் வையம்பட்டி காவல்நிலையத்தில் புதன்கிழமை ஆஜரான ஊா் பொதுமக்கள், திருவிழாவை நடத்த விருப்பம் தெரிவித்து கையெழுத்திட்டு விருப்பமனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனத் துறையினருக்கு யானைகள் கணக்கெடுப்புப் பயிற்சி

குமரி காசிவிஸ்வநாதா் கோயிலில் கும்பக் கலசம் திருட்டு

மாற்றத்துக்கான புயல் வீசுகிறது: ராகுல்

குமரியில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

சிவந்திபுரத்தில் மீண்டும் சிறுவனைத் தாக்கிய மந்திகளை பிடிக்க குழு அமைப்பு

SCROLL FOR NEXT