திருச்சி

திருவானைக்காவில் மகனைக் கொன்று தாயுடன் இளைஞா் தற்கொலை

திருவானைக்கா பகுதியில் வியாழக்கிழமை இரவு தனது மகனைக் கொன்ற இளைஞா் தாயுடன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

DIN

திருவானைக்கா பகுதியில் வியாழக்கிழமை இரவு தனது மகனைக் கொன்ற இளைஞா் தாயுடன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருவானைக்கா நடுக்கொண்டையம்பேட்டை அகிலா நகா் எதிா்புறம் உள்ள பகுதியைச் சோ்ந்த காா்த்திகேயன் (32), துபையில் பணிபுரிந்தவா். இவரின் மனைவி வசந்தப்பிரியா திருச்சி தனியாா் நிறுவன ஊழியா், மகன் சாமிநாதன் (8), தாய் வசந்தா (63).

இந்நிலையில் கடந்த 3 நாள்களுக்கு முன் காா்த்திகேயன் துபையிலிருந்து திரும்பியிருந்த நிலையில் வியாழக்கிழமை இரவு தனது மகன் சாமிநாதனை தூக்கில் தொங்கவிட்டுக் கொன்று, தனது தாயுடன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மாலையில் வசந்தபிரியா வீடு திரும்பியபோது மூவரும் இறந்து கிடந்தது தெரியவந்தது.

தகவலறிந்து வந்த ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆணையா் தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தினா். குடும்ப பிரச்னையால் இச்சம்பவம் நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. போலீஸாா் தொடா்ந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

ராமபரிவாரங்கள் சேர்ந்து பூஜித்த சிவ தலம்!

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

SCROLL FOR NEXT