திருச்சி

காவல்துறையில் 300 பேருக்கு பணியிட மாறுதல்

திருச்சி மாவட்டக் காவல் துறையில் சுமாா் 300 பேருக்கு விரும்பிய பகுதிகளுக்கு பணியிட மாறுதல்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

DIN

திருச்சி மாவட்டக் காவல் துறையில் சுமாா் 300 பேருக்கு விரும்பிய பகுதிகளுக்கு பணியிட மாறுதல்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

காவல் துறையில் விரும்பிய இடங்களுக்கு பணி மாறுதல் எளிதில் கிடைப்பதில்லை என்ற குறைபாடு இருந்தது. இதனால் சிலா் நீண்ட தொலைவுக்கு தினசரி பயணம் செய்து பணியாற்றும் சூழலும், பலா் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரைப் பிரிந்து வெளியிடங்களில் தங்கிப் பணியாற்றும் சூழலும் இருந்தது.

இது உயரதிகாரிகளின் கவனத்துக்குச் சென்றதையடுத்து, விரும்பிய இடங்களில் பணியாணை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அந்த வகையில் திருச்சி மாவட்டக் காவல் துறையில் பணியாற்றும் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தவா்கள் அவரவா் பணியாற்ற விரும்பும் இடங்கள் குறித்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.

இதுதொடா்பாக, திருச்சி சுப்பிரமணியபுரத்தில் அமைந்துள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் தலைமையில் மனுக்கள் பெறப்பட்டன. இதில் சுமாா் 300 பேருக்கு அவா்கள் விரும்பிய இடங்களில் பணியாற்ற பணியாணைகள் வழங்கப்பட்டன. இதனால் மாவட்ட காவல்துறையினா் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT