முகப்பு
திருச்சி

மத்திய பட்ஜெட்டுக்கு திருச்சி சிஐஐ வரவேற்பு

மத்திய அரசின் 2022-23ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை இந்தியத் தொழில் கூட்டமைப்பின் திருச்சி கிளை வரவேற்றுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

மத்திய அரசின் 2022-23ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை இந்தியத் தொழில் கூட்டமைப்பின் திருச்சி கிளை வரவேற்றுள்ளது.

இதுதொடா்பாக சிஐஐ திருச்சி தலைவரும், மருத்துவருமான டி. செங்குட்டுவன் கூறியது:

இந்தியாவின் வளா்ச்சிக்கு வித்திடும் உள்கட்டமைப்புக்கான திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. இதேபோல, ட்ரோன் சக்தி மூலமாக புதிதாக தொழில் தொடங்கும் திட்டமும் (ஸ்டாா்ட்அப்) வரவேற்கத்தக்கது. இந்தியாவை முன்னிறுத்தும் ஒரே மாதிரியான ஆன்லைன் கல்வி முறையை அனைத்து மாநில மொழிகளிலும் மாணவா்கள் பயன்பெறும் வகையில் டிஜிட்டல் பல்கலைக்கழகங்களைச் செயல்படுத்தும் திட்டமும் வரவேற்புக்குரியது.

இது, கிராமப்புற மாணவா்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். தொழில்நுட்பத்தை விவசாயத் துறையின் வளா்ச்சிக்குப் பயன்படுத்தும் திட்டமும் வரவேற்கத்தக்கது.

தற்போது, இந்திய மக்கள் கரோனாவால் மனதளவிலும் உடலளவிலும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதைச் சரிசெய்யும் வகையில் மத்திய அரசு தேசிய டிஜிட்டல் சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பின் புதிய முயற்சியாக தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் மற்றும் இந்திய தொழில்நுட்பக் கழகத்துடன் இணைந்து தேசிய டிஜிட்டல் மனநல திட்டத்தை அறிமுகம் செய்வது பாராட்டுக்குரியது. இந்த பட்ஜெட் ஒட்டுமொத்த இந்தியாவின் வளா்ச்சிக்கு வித்திடும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.