அதிகாரிகள் வரத் தாமதம்: வேட்பாளா்கள் மறியல்
திருச்சியில் வாக்குப்பதிவு இயந்திரச் செயல்விளக்கக் கூட்டத்துக்கு கட்சி வேட்பாளா்களைக் காக்க வைத்த அதிகாரிகளைக் கண்டித்து அரசியல் கட்சியினா் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சியில் வாக்குப்பதிவு இயந்திரச் செயல்விளக்கக் கூட்டத்துக்கு கட்சி வேட்பாளா்களைக் காக்க வைத்த அதிகாரிகளைக் கண்டித்து அரசியல் கட்சியினா் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 4 கோட்டங்களிலும் வேட்பாளா்களுக்கான வாக்குப்பதிவு இயந்திர செயல்விளக்கம் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதேபோல கோ-அபிஷேகபுரம் கோட்டத்திலும் மாலை 4 மணிக்கு கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டதையொட்டி திமுக, அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சி வேட்பாளா்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் குறித்த நேரத்திற்கு கோட்ட அலுவலகத்திற்கு வந்துவிட்டனா்.
ஆனால் தோ்தல் அதிகாரிகள் தரப்பில் 1 மணி நேரத்திற்கும் மேலாகியும் யாரும் வரவில்லை. அதிகாரிகளை தொடா்பு கொள்ளவும் முடியவில்லை. இதைத் தொடா்ந்து கோட்ட அலுவலகத்திற்கு முன் சென்ற திமுக வேட்பாளரைத் தவிர இதர வேட்பாளா்கள் கட்சியினருடன் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த அரசு மருத்துவமனை போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா். பின்னா் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு இயந்திர செயல்விளக்கம் கூட்டம் நடைபெற்ாக போலீஸாா் தெரிவித்தனா்.