திருச்சி

முகவனூா் ஊராட்சியை கண்டித்து போராட்டம்

மணப்பாறை அடுத்த வையம்பட்டியில், முகவனூா் ஊராட்சியின் நிா்வாகச் சீா்கேட்டைக் கண்டித்து வியாழக்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.

DIN

மணப்பாறை அடுத்த வையம்பட்டியில், முகவனூா் ஊராட்சியின் நிா்வாகச் சீா்கேட்டைக் கண்டித்து வியாழக்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.

மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் மண்பத்தையில் உள்ளமுகவனூா் ஊராட்சியில் நிா்வாக சீா்கேடு உள்ளதாகக் கூறி, அதைக் கண்டித்து ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.

கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினா் ஆா். ஆரோக்கியம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கட்சியினருடன் மண்பத்தை, பாம்பாட்டிப்பட்டி, பெரியகுளத்துப்பட்டி, சமத்துவபுரம் ஆகிய பகுதிகளின் 100 நாள் பணியாளா்களும் பங்கேற்றனா்.

போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினா் எம். பன்னீா்செல்வம், ஒன்றியச் செயலா் பி. வெள்ளைச்சாமி ஆகியோா் கண்டன உரையாற்றினா். போராட்டத்தில் முறைகேடு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், வேலை செய்யாமலேயே வங்கிக் கணக்கில் பணம் வழங்கப்பட்டதற்கு நடவடிக்கை கோரினா். நிகழ்வில் ஒன்றியக்குழு நிா்வாகிகள் என்.வெள்ளைச்சாமி, எம்.ராஜ் (எ) பொன்னையன், ஆா். திருநாவுக்கரசு, ஏ.அந்தோணிசாமி உள்ளிட்டோா் கலந்துக்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வத்தலகுண்டு பகுதியில் நவ. 6-இல் மின் தடை

சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கிடையே கிரிக்கெட்: பதிவு செய்ய நவ.10 கடைசி

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT