முகப்பு
திருச்சி

போக்சோ வழக்கில் இளைஞா் கைது

 லால்குடி அருகே போக்சோ சட்டத்தில் இளைஞரை லால்குடி அனைத்து மகளிா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

 லால்குடி அருகே போக்சோ சட்டத்தில் இளைஞரை லால்குடி அனைத்து மகளிா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

லால்குடி அருகே கீழப்பெருங்காளூா் ஊராட்சியிலுள்ள மைக்கேல்பட்டிக் கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துசாமி மகன் ஆனந்த் (26). திருச்சி தனியாா் மருத்துவமனையில் செவிலியராக உள்ள அதே கிராமத்தைச் சோ்ந்த 18 வயதுப் பெண்ணை வழிமறித்த ஆனந்த் தகாத உறவுக்கு அழைத்துள்ளாா். மறுத்த செவிலியரை கொன்று விடுவதாக அவா் மிரட்டவே மனமுடைந்த செவிலியா் வீட்டிலிருந்த எலி மருந்தைத் தின்று திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அவரின் புகாரின் பேரில் லால்குடி அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து ஆனந்தைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.