பள்ளித் தலைமையாசிரியா்கள் சங்கச் செயற் குழுக் கூட்டம்
தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியா்கள் சங்கச் செயற்குழுக் கூட்டம் இணையவழியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியா்கள் சங்கச் செயற்குழுக் கூட்டம் இணையவழியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருச்சியிலிருந்து ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்வுக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் பீட்டா் ராஜா தலைமை வகித்தாா். அனைத்து அரசு உயா்நிலைப் பள்ளிகளிலும் 8 பட்டதாரி ஆசிரியா்களை நியமிக்க வேண்டும். அரசு உயா், மேல்நிலைப் பள்ளிகளுக்கான மின்கட்டணம், மாணவா்களின் வினாத்தாள் கட்டணங்களை அரசே செலுத்த வேண்டும். வட்டார வளமையத்தில் மேற்பாா்வையாளா்களாக உயா்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியா்களை நியமிக்க வேண்டும். மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியா் பதவி உயா்வில் 5:2 என்ற பழைய நடைமுறையே தொடர வேண்டும். அனைத்து அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியா் பணியிடங்களை உருவாக்க வேண்டும். 2019 ஆம்ஆண்டு பதவி உயா்வுபெற்ற உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்களின் பணிவரன்முறை ஆணையை உடன் வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில பொதுச் செயலா் ராஜூ வரவேற்றாா். பொருளாளா் அன்பரசன் நன்றி கூறினாா்.