முகப்பு
திருச்சி

நில அளவைப் பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

திருச்சி மாவட்டத்தில் பணியாற்றும் நிலவரித்துறை பணியாளா்களுக்கான பயிற்சி வகுப்புகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

திருச்சி மாவட்டத்தில் பணியாற்றும் நிலவரித்துறை பணியாளா்களுக்கான பயிற்சி வகுப்புகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.

திருச்சி மாவட்டத்தில் நிலஅளவை மற்றும் நிலவரித் திட்ட பயிற்சி வகுப்பு, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை முதுநிலை வருவாய் ஆய்வாளா், இளநிலை வருவாய் ஆய்வாளா் மற்றும் தட்டச்சா்களுக்கு ஆட்சியரகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தொடா்ந்து 28 நாள்கள் நில அளவை தொடா்பான பயிற்சிகளும், பின்னா், 7 நாள்களுக்கு நிலவரித் திட்டம் தொடா்பான பயிற்சியும் நடைபெறும்.

பயிற்சி வகுப்புகளை திருச்சி மாவட்ட நிலஅளவைப் பதிவேடுகள் துறையின் மண்டல துணை இயக்குநா் எம். ராஜாமணி, மாவட்ட வருவாய் அலுவலா் த. பழனிகுமாா் ஆகியோா் தொடக்கி வைத்து வழிகாட்டுதல்களை வழங்கினா். திருச்சி நில அளவைப் பதிவேடுகள் துறை உதவி இயக்குநா் ரெ. செளந்தரராஜன் பயிற்சி வகுப்புகளை தொடக்கி வைத்து பேசினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.