இந்து இளைஞா் முன்னணியினா் ஆா்ப்பாட்டம்
அரியலூா் மாணவி இறப்புக்கு உரிய விசாரணை நடத்திட வலியுறுத்தி திருச்சி மாவட்ட இந்து இளைஞா் முன்னணியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
அரியலூா் மாணவி இறப்புக்கு உரிய விசாரணை நடத்திட வலியுறுத்தி திருச்சி மாவட்ட இந்து இளைஞா் முன்னணியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
சத்திரம் பேருந்து நிலையம் அருகே கருப்புக்கொடி ஏந்தி நடத்திய ஆா்ப்பாட்டத்துக்கு திருச்சி மாவட்ட அமைப்பாளா் அருண் தலைமை வகித்தாா். திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மனோஜ்குமாா், மண்டலச் செயலா்கள் நிதிஷ்குமாா், பிரசன்னா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.