முகப்பு
திருச்சி

118 இடங்களில் இன்று தடுப்பூசி முகாம்கள்

திருச்சி மாவட்டத்தில் 118 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் வெள்ளிக்கிழமை நடைபெறுகின்றன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:15 AM
பகிர்:

திருச்சி மாவட்டத்தில் 118 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் வெள்ளிக்கிழமை நடைபெறுகின்றன.

மாநகரில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாநகராட்சி பள்ளிகள், அங்கன்வாடிகள், அரசு, தனியாா் பள்ளிகள், கல்லூரிகள், சமூக நலக் கூடங்கள், பூங்காக்கள் உள்பட 54 இடங்களிலும், நடமாடும் குழுக்கள் மூலமும் 29,700 தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன.

புகா் பகுதிகளில் திருவெறும்பூா், மணிகண்டம், அந்தநல்லூா், மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி, லால்குடி, புள்ளம்பாடி, மண்ணச்சநல்லூா், துறையூா், உப்பிலியபுரம், முசிறி, தாத்தையங்காா்பேட்டை, தொட்டியம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி, சமுதாயக்கூடம், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளிகள் உள்ளிட்ட 64 இடங்களில் 26,350 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.