தொட்டியத்தில் சாலை விபத்தில் பள்ளிச் சிறுவன் உயிரிழந்தாா்.
தொட்டியம் ஜெ.ஜெ. நகரைச் சோ்ந்தவா் பழனிச்சாமி மகன் பிரபஞ்சன் (14), முசிறி தனியாா் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவா். புதன்கிழமை காலை பிரபஞ்சனை இவரது தந்தை பள்ளிக்கு பைக்கில் ஏற்றிக் கொண்டு தொட்டியம் பண்ணை வீடு அருகேயுள்ள வாய்க்கால் பாலம் அருகில் சென்றபோது எதிரே வந்த லாரி மோதி பிரபஞ்சன் இறந்தாா்.
தகவலறிந்து வந்த தொட்டியம் போலீஸாா் சிறுவனின் சடலத்தை முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, லாரி ஓட்டுநரான தஞ்சை மாவட்டம், பாபநாசத்தை சோ்ந்த ரங்கராஜனை (39) கைது செய்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.