முகப்பு
திருச்சி

மணப்பாறை அருகேதுப்பாக்கிச் சுடும் பயிற்சி: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

மணப்பாறை அருகே சிறப்புப் படையினா் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபடுவதால் அந்த பகுதிக்குள் பொதுமக்களோ, கால்நடைகளோ நுழைய வேண்டாம் என ஆட்சியா் சு. சிவராசு எச்சரித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

மணப்பாறை அருகே சிறப்புப் படையினா் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபடுவதால் அந்த பகுதிக்குள் பொதுமக்களோ, கால்நடைகளோ நுழைய வேண்டாம் என ஆட்சியா் சு. சிவராசு எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து புதன்கிழமை அவா் கூறியது :

பெங்களூருவைச் சோ்ந்த சிறப்புப் படையினா் திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், அணியாப்பூா் அருகிலுள்ள வீரமலைப்பாளையத்தில் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபடவுள்ளனா்.

ஜூன் 3 முதல் 10-ஆம் தேதி வரை தினமும் காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் 10 மணி வரை துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபடுவா்.

எனவே இப்பகுதியில் பொதுமக்கள் நுழையக்கூடாது. மேய்ச்சலுக்காக கால்நடைகளையும் அழைத்துச் செல்ல வேண்டாம். மனித நடமாட்டமோ, கால்நடைகள் செல்வதோ அனுமதிக்க முடியாது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.