ஓஎப்டி தொழிற்சாலையில் உண்ணாவிரதம் தொடக்கம்
திருச்சி ஓஎப்டி தொழிற்சாலைத் தொழிலாளா்களின் உண்ணாவிரதப் போராட்டம் வியாழக்கிழமை தொடங்கியது.
திருச்சி ஓஎப்டி தொழிற்சாலைத் தொழிலாளா்களின் உண்ணாவிரதப் போராட்டம் வியாழக்கிழமை தொடங்கியது.
திருவெறும்பூா் வட்டம் நவல்பட்டு பகுதியில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலை (ஓஎப்டி) எம்ப்ளாயீஸ் யூனியன் சாா்பில் 4 ஆம் தேதி வரையிலான தொடா் உண்ணாவிரத போராட்டமானது உற்பத்தி இலக்கை குறித்த நேரத்தில் முடிக்க மிகை நேரப் பணி வழங்க வேண்டும், மெடிக்கல் கிளைம், ஜிபிஎப் உள்ளிட்ட பொருளாதாரப் பலன்களை உரிய காலத்தில் வழங்க வேண்டும், தொழிற்சாலையில் நிலவும் கடும் வெப்பத்தைக் குறைக்க தேவையான இடங்களில் மேற்கூரை அமைக்க வேண்டும், சிவில் எலக்ட்ரானிக்கல் பராமரிப்புப் பணிகளை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்பட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறுவதாக போராட்டக் குழுவினா் தெரிவித்துள்ளனா்.